Sports: அந்த சிவப்பு கலர் ஜெர்சி

ரஷ்யாவில் 2018ல் நடந்த உலகக்கோப்பை தொடரின் போது கால்பந்து மீதான ஈர்ப்பு ஏற்பட்டிருந்தாலும், அது தீப்பொறியாக பற்றிக் கொண்டது 2018-19 UCL இறுதிப் போட்டியின் போது தான். அந்த சமயத்தில் Liverpool FC அணி சாம்பியன் பட்டம் வென்று உலகின் கவனத்தை ஈர்த்தது. அந்த அணியின் செந்நிற ஜெர்சியும், "The Reds" என்ற செல்லப் பெயரும், கம்யூனிசம் சார்ந்த நிர்வாகப் பின்னணியும் என்னை பெரிதும் கவர்ந்தன. Everton அணியுடனான மோதல் முதல் ஜான் ஹவுல்டிங்கின் Anfield மைதானத்தின் உருவாக்கம் வரை அதன் வரலாற்றை தேடி தேடி படிக்கச் செய்தது.

இதையடுத்து English Premier League தொடரில் Liverpool FC விளையாடும் போது, Salah, Firmino, Mane என்ற மூவரின் முன்கள ஆட்டமும், Henderson-ன் தலைமையும், Virgil Van Dijk, Arnold போன்ற உலகத் தரம் வாய்ந்த நடுகள வீரர்களும் அந்த அணி மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியது. 2019-20 Premier League Champion, 2019 கத்தார் FIFA Club World Cup Champion என ஒரே ஆண்டில் மூன்று பட்டங்களை வென்று சுவாரசியத்தின் உச்சத்தில் கொண்டு போய் லிவர்பூல் அணி அமரவைத்தது. கடந்த Premier League சீசனில் முக்கிய வீரர்களின் காயம் காரணமாக தோல்விகளை தழுவி 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

ஆனால் நடப்பு சீசனில் தொடக்கம் முதலே திறமையான வீரர்களின் அணிவகுப்பில் சரவெடியாய் வெடித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக என்னுடைய Favourite ஸ்டிரைக்கர் Salah புதிய சாதனைகளை படைத்து வருவது Goose Bumps தருணங்களாக நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த உற்சாகம் Champions League தொடரிலும் எதிரொலிக்க 2 சீசனுக்கு பின்னர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது Liverpool. வரும் மே 29ஆம் தேதி பாரிஸில் நடக்கும் கடைசி போட்டியில் Real Madrid அணியுடன் மோதுகிறது.

இது கிட்டதட்ட 2017-18 Champions League தொடரின் இறுதிப் போட்டி போல அமைந்துவிட்டது. அப்போது Real Madrid பட்டம் வென்றிருக்கலாம். இம்முறை அப்படி நடக்கக் கூடாது என்பது தான் கோடான கோடி Liverpool ரசிகர்களின் விருப்பமாக இருக்கும். பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கால்பந்து போட்டிகள் இந்திய நேரப்படி நள்ளிரவில் தான் பார்க்க முடியும். அந்த வகையில் UCL இறுதிப் போட்டியும் மே 29 நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது.

2020 Euro தொடரின் முக்கிய ஆட்டங்களை கொட்ட கொட்ட விழித்து தமிழ் கமெண்டரியில் ஆர்வத்துடன் கேட்டது போல், இந்த போட்டியையும் காண உற்சாகம் பீறிட்டு காணப்படுகிறது. You Will Never Walk Alone என்ற லிவர்பூல் அணியின் தீம் சாங் போல, உங்களுக்கு நாங்கள் பக்க பலமாக நிற்கிறோம். வென்று வாருங்கள் UCL கோப்பையை. வாழ்த்துகிறோம் Liverpool அணியை...

Write a comment ...

Write a comment ...