Thibaut Courtois யார் சார் நீங்க? நொறுங்கி போன Liverpool FC...
29 May, 2022
Liverpool FC
உலகின் காதல் நகரம் என்று வர்ணிக்கப்படும் பாரீஸில் நேற்று இரவு கால்பந்து காதலர்களுக்கு மகத்தான நாள் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஐரோப்பிய கால்பந்தை விரும்பி பார்க்கும் நபர்களுக்கு தவிர்க்க முடியாத நாள். ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து போட்டியாக கருதப்படும் UEFA Champions League தொடரின் இறுதிப் போட்டி Stade de France மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. இதற்கு முக்கிய காரணம் ரசிகர்களும், கியூபன் - அமெரிக்க பாடகியான Camila Cabello-வின் உற்சாகமூட்டும் தொடக்கப் பாடலும், அனல் பறந்த ஆட்டமும் ஆகும். என்னவொரு குறை என்றால் பாரிஸ் மைதானத்தில் PSG அணியை இறுதிப் போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் Round of 16 உடன் வெளியேறி அதிர்ச்சியூட்டியது. இரண்டு நாட்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட புல் தரை, Zinedine Zidane, Cristiano Ronaldo, Rafael Nadal, Laurent blanc என ஏராளமான ஜாம்பவான்களின் வருகை, UEFA Theme Song என திருவிழாக் கோலமாக Stade de France மைதானம் காட்சி அளித்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அடுத்தபடியாக பிரம்மாண்டம் உயர்ந்து நிற்கும் போட்டியாக திகழ்வது Champions League இறுதிப் போட்டியை தான் சொல்ல வேண்டும். அப்படியொரு உணர்வு. ரசிகர்கள் அரங்கிற்குள் வர தாமதம் ஆனதால் போட்டி ஆரம்பிக்க அரை மணி நேரம் வரை தாமதம் ஆனது. UEFA Champions League தொடரின் இறுதிப் போட்டில் லிவர்பூல், ரியல் மேட்ரிட் அணிகள் மூன்றாவது முறையாக மோதியது குறிப்பிடத்தக்கது.
Real Madrid CF
இப்படியொரு வாய்ப்பு எந்தவொரு ஜாம்பவான் அணிகளுக்கும் வாய்த்தது இல்லை. இதில் 13 முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் பட்டம் வென்று தொட முடியாத உச்சத்தில் இருக்கும் ரியல் மாட்ரிட் அணி, மீண்டும் ஒருமுறை கோப்பையை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கியது. ரொனால்டோ அணியில் இருந்து சென்றிருந்தாலும் தனிக்காட்டு ராஜாவாக இந்த தொடரில் 15 கோல்கள் அடித்து Karim Benzema முன்னிலையில் இருந்தார். 2018 UCL இறுதிப் போட்டியில் காயம்பட்டு Mo Salah வெளியேற 1-3 என லிவர்பூல் தோல்வியை தழுவியது. எனவே வெற்றி தாகத்தை தீர்க்க சாலா அதிரடி காட்டுவாரா? லிவர்பூல் ஜொலிக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கியது ஆட்டம். லிவர்பூல் அணியில் Mo Salah என்றால், ரியல் மாட்ரிட் அணியில் Vinicius Jr.
இருவரும் தங்கள் அணியின் Forward-ல் நின்று துறுதுறுவென ஆட்டம் காட்டி வந்தனர். தொடக்கத்தில் Ball Possession லிவர்பூல் அணியின் கையிலேயே இருந்தது. 16வது நிமிடம், 21வது நிமிடம், 58வது நிமிடம், 64வது நிமிடம், 69வது நிமிடம், 83வது நிமிடம் என கோல் போஸ்டை நோக்கி பந்தை லிவர்பூல் அடித்தும் ரியல் மாட்ரிட் கோல் கீப்பர் Thibaut Courtois தடுத்துவிட்டார். சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் 9 Save செஞ்ச ஒரே கோல் கீப்பர் என்ற பெருமையை பெற்றுவிட்டார். இவ்வளவு வெறித்தனமாக கோல் கீப்பரை இதுவரை நான் பார்த்ததே இல்லை. பெரும்பாலும் English Premier League-ஐ பார்த்தே காலத்தை கடத்தி விட்டதால் Spain பக்கம் பெரிதாக வரவில்லை.
Champions League Winners
இனி இந்தப் பக்கமும் கொஞ்சம் தலைகாட்ட வேண்டியது தான். வழக்கமாக இரண்டாவது பாதியில் Come Back கொடுத்து மிரள வைக்கும் அணி என்ற வர்ணிக்கப்படுவது ரியல் மாட்ரிட். அதை இந்த போட்டியிலும் நிரூபித்து காட்டினர். 45வது நிமிடத்தில் Karim Benzema அடித்த கோல் ஆப்சைட் காரணமாக அளிக்கப்படவில்லை. 59வது நிமிடத்தில் Right Wing-ல் இருந்து ரியல் மாட்ரிட் Forward Player Valverde அடித்த பாஸை Box-க்குள் ஓடிவந்து Right Leg-ல் வாங்கி லைட்டாக தட்டி விட்டு கோலாக மாற்றினார் Vinicius Jr. இதுதான் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான நிமிடமாகவும் மாறிப் போனது. அதன்பிறகு லிவர்பூல் எவ்வளவோ முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை.
கடைசியில் 14வது முறையாக UCL சாம்பியன் பட்டத்தை வென்று Real Madrid புதிய சாதனை படைத்தது. இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் Carlo Ancelotti 4 முறை UCL பட்டம் வென்ற Manager என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த ஆட்டத்தில் ரியல் ஹூரோ மாட்ரிட் அணி கோல் கீப்பர் Thibaut Courtois தான் சொல்ல வேண்டும். என்னா மனுஷன்யா அவரு... நடப்பாண்டு இறுதியில் உலகக் கோப்பை வரவுள்ள நிலையில், Belgium கால்பந்து அணிக்கு Courtois பெரிய அரணாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. லிவர்பூல் ரசிகனாக வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
Write a comment ...