• Mageshbabu
    Mageshbabu
Mageshbabu logo
    • Change PhotoChange photo
    • Create A Unique Profile PhotoCreate A Unique Profile Photo
  • Delete photo

Mageshbabu

Senior Digital Content Producer | Chennai
  • 2 Followers

  • 3 Following

  • புது ரத்தம் பாய்ச்சிய நாகெல்ஸ்மேன்... டார்டன் ஆர்மியை துவம்சம் பண்ண ஜெர்மனிபுது ரத்தம் பாய்ச்சிய நாகெல்ஸ்மேன்... டார்டன் ஆர்மியை துவம்சம் பண்ண ஜெர்மனி

    புது ரத்தம் பாய்ச்சிய நாகெல்ஸ்மேன்... டார்டன் ஆர்மியை துவம்சம் பண்ண ஜெர்மனி

    உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழாக்களில் ஒன்று. உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்தபடியாக அதிகப்படியான பார்வையாளர்களை கொண்ட தொடர். உலகின் தலைசிறந்த கால்பந்து அணிகளை கொண்ட கண்டத்தின் விளையாட்டு திருவிழா. யூரோ 2024 தொடர் கோலாகல கொண்டாட்டங்கள் உடன் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கியுள்ளது. இம்முறை ஒட்டுமொத்த தொடரின் போட்டிகளும் நடைபெறும் நாடு ஜெர்மனி.

    Mageshbabu
    Mageshbabu
  • FIFA World Cup 2022: மறக்க முடியாத அனுபவங்கள்!!!FIFA World Cup 2022: மறக்க முடியாத அனுபவங்கள்!!!

    FIFA World Cup 2022: மறக்க முடியாத அனுபவங்கள்!!!

    கிரிக்கெட்டை தாண்டி வேறெதுவும் தெரியாத நிலையில் கால்பந்தின் மகிழ்ச்சியை ஒவ்வொரு நொடியும் அள்ளிப் பருக அச்சாரம் போட்டது 2018 ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பை. பெங்களூருவில் வேலை பார்த்து கொண்டிருந்த போது சக ஊழியர்களாக பணியாற்றிய கேரள நண்பர்களின் கால்பந்து மீதான ஆர்வம் அப்போது என்னை திகைக்க வைத்தது. அவ்வப்போது ஓரிரு போட்டிகளில் சில நிமிட ஆட்டத்தை மட்டும் பார்த்தேன். அதன்பிறகு கால்பந்து போட்டிகள் தொடர்பான செய்திகளை தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன். சரியாக ஓராண்டு கழித்து 2019ல் ஐரோப்பாவின் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை லிவர்பூல் வென்றது எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த சிவப்பு நிறமும், லிவர்பூல் பின்னணியில் அமைந்த பொதுவுடைமை சித்தாந்தமும் என்னை கட்டி போட்டன. அதன் உச்சபட்சமாக லிவர்பூல் பயிற்சியாளர் ஜர்கன் க்ளோப்பின் அணுகுமுறைகள், ஆட்ட நுணுக்கங்கள் ஆர்வத்தை தூண்டின. இங்கிலீஷ் பிரிமியர் லீக்கின் ரசிகராக மாறினேன். லிவர்பூல் அணியின் Die Hard ரசிகராக உருவெடுத்தேன்.

    Mageshbabu
    Mageshbabu
  • Wales... 64 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு சரித்திரம்...Wales... 64 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு சரித்திரம்...

    Wales... 64 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு சரித்திரம்...

    2018ல் நடந்த FIFA கால்பந்து உலகக்கோப்பையில் லேசாக பிறந்த ஆர்வம், அடுத்து வந்த English Premier League-ல் தீயாய் பற்றிக் கொண்டது. நான்கு ஆண்டுகளில் பல்வேறு லீக்குகள், Euro 2020, Copa America, Africa Cup of Nations என ஓரளவு கால்பந்து குறித்து விவரம் தெரிய ஆரம்பித்தது. நடப்பாண்டு அடுத்த உலகக்கோப்பைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். இம்முறை சற்றே விவரம் தெரிந்தவனாக தொடரை முழுவதுமாக கண்டு ரசித்து, ஆழமாக அலசி ஆராய்ந்து, என்னுடைய எழுத்துகளால் கொண்டாடி தீர்க்கக் காத்திருக்கிறேன். இதில் முத்தாய்ப்பாக ஒரு செய்தி கிடைத்துள்ளது. ஆம்... வேல்ஸ் கால்பந்து அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றதை தான் இங்கே சொல்கிறேன். கடைசியாக 1958ஆம் ஆண்டு நடந்த FIFA உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றிருந்தனர்.

    Mageshbabu
    Mageshbabu
  • One India Tamil என்ற ராட்சசனும், பக்குவமாய் செதுக்கிய ஆசானும்...One India Tamil என்ற ராட்சசனும், பக்குவமாய் செதுக்கிய ஆசானும்...

    One India Tamil என்ற ராட்சசனும், பக்குவமாய் செதுக்கிய ஆசானும்...

    இளைய நிலா பொழிகிறதே

    Mageshbabu
    Mageshbabu
  • Thibaut Courtois யார் சார் நீங்க? நொறுங்கி போன Liverpool FC...Thibaut Courtois யார் சார் நீங்க? நொறுங்கி போன Liverpool FC...

    Thibaut Courtois யார் சார் நீங்க? நொறுங்கி போன Liverpool FC...

    உலகின் காதல் நகரம் என்று வர்ணிக்கப்படும் பாரீஸில் நேற்று இரவு கால்பந்து காதலர்களுக்கு மகத்தான நாள் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஐரோப்பிய கால்பந்தை விரும்பி பார்க்கும் நபர்களுக்கு தவிர்க்க முடியாத நாள். ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து போட்டியாக கருதப்படும் UEFA Champions League தொடரின் இறுதிப் போட்டி Stade de France மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. இதற்கு முக்கிய காரணம் ரசிகர்களும், கியூபன் - அமெரிக்க பாடகியான Camila Cabello-வின் உற்சாகமூட்டும் தொடக்கப் பாடலும், அனல் பறந்த ஆட்டமும் ஆகும். என்னவொரு குறை என்றால் பாரிஸ் மைதானத்தில் PSG அணியை இறுதிப் போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    Mageshbabu
    Mageshbabu
  • ஷபீர் அகமது / Shabbir Ahmedஷபீர் அகமது / Shabbir Ahmed

    ஷபீர் அகமது / Shabbir Ahmed

    ஊடகத்துறைக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. இந்த காலகட்டத்தில் நான் வியர்ந்து பார்த்த ஒருசில பத்திரிகையாளர்களில் மிகவும் முக்கியமானவர் இவர். உண்மையான ஊடகவியலாளர் எப்படி இருக்க வேண்டும்? மக்கள் பிரச்சினைகளை எப்படி அணுக வேண்டும்? மக்கள் மன்றத்தில் போட்டு உடைக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? மக்கள் பிரதிநிதிகளை நோக்கி கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன? எவையெல்லாம் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள்? என்பதை நொடிக்கு நொடி நினைவூட்டக் கூடியவர். சக ஊடகவியலாளர்கள் பலமுறை இவரை பற்றி பேசியதை கேட்டிருக்கிறேன். இவருடன் பழக்கம் கிடையாது. பெரிதாக அறிமுகமும் இல்லை. ஆனால் Times Now ஊடகத்தில் நேரலையில் வரும் போதெல்லாம் தவறாமல் பார்த்து விடுவேன். இவருடைய பழைய செய்தி சேகரிப்புகளையும் தேடித் தேடிப் பார்த்திருக்கிறேன். ஒருகட்டத்தில் அருகிலேயே பார்க்கும் வாய்ப்பு வந்தது. Tamil Samayam அலுவலகத்தின் மேல் தளத்தில் தான் Times Now அலுவலகம். அடிக்கடி எங்கள் தளத்திற்கு வந்து உரையாடி இருக்கிறார்.

    Mageshbabu
    Mageshbabu
  • Electricity: தமிழ்நாட்டின் மின் தேவையும், உற்பத்தி இலக்கும்Electricity: தமிழ்நாட்டின் மின் தேவையும், உற்பத்தி இலக்கும்

    Electricity: தமிழ்நாட்டின் மின் தேவையும், உற்பத்தி இலக்கும்

    உலகம் முழுவதும் மக்கள்தொகை பெருக்கமும், கோடை வெயிலின் தாக்கமும் மின் தேவையை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தமிழகத்தை பொறுத்தவரை நிலக்கரி தான் பிரதான மின் உற்பத்தி ஆதாரமாக விளங்குகிறது. இதற்காக நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகின்றன. இதையே நம்பி பூமித்தாயை சுரண்டி கொண்டே இருந்தால் ஒருகட்டத்தில் எல்லாம் பூஜ்யத்தில் முடிந்துவிடும். எனவே மரபுசாரா எரிசக்தியை நோக்கி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே காற்று, சோலார், ஹைட்ரோ, பயோகேஸ், நியூக்ளியர், கேஸ் மற்றும் டீசல் ஆகிய மாற்று சக்தியை கையிலெடுத்து தமிழகம் மின் தேவையை சமாளித்து கொண்டிருக்கிறது. இதில் மின்சார உற்பத்திக்கான கட்டமைப்பு மற்றும் உற்பத்தி என இரண்டு விதமான அளவீடுகள் இருக்கின்றன. அதாவது,

    Mageshbabu
    Mageshbabu
  • Premier League: பரவாயில்லை Liverpool FC...Premier League: பரவாயில்லை Liverpool FC...

    Premier League: பரவாயில்லை Liverpool FC...

    English Premier League கால்பந்து தொடர் முடிவுக்கு வந்தது. 20 அணிகள், Home & Away என ஒவ்வொரு அணிக்கும் 38 போட்டிகள், ஆகஸ்ட் தொடங்கி மே மாதம் வரை 10 மாதங்கள் திருவிழாக் கோலமாக தொடர்ந்தது. Etihad Stadium, Anfield, Stamford Bridge, Old Trafford, Emirates Stadium, Goodison Park, Villa Park என 20 மைதானங்களில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஆடிய ஆட்டங்கள் நிறைவு பெற்றுவிட்டன. கடைசி நாளான நேற்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஒரே நேரத்தில் 10 போட்டிகளும் தொடங்கின. இப்படி ஒரே நேரத்தில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அனைத்து அணிகளும் விளையாடும் என்பதால் உற்சாகம் பீறிட்டு கிளம்பியது. அதுவும் கோப்பையை வெல்லப் போவது யார் என்பது கடைசி போட்டி வரை நீண்டு விட்டால் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. நடப்பு சீசன் அப்படியொரு வாய்ப்பை உருவாக்கி தந்தது.

    Mageshbabu
    Mageshbabu
  • Arputhammal: பேரறிவாளனும், தாய் நாவலும்Arputhammal: பேரறிவாளனும், தாய் நாவலும்

    Arputhammal: பேரறிவாளனும், தாய் நாவலும்

    சுதந்திர காற்றை சுவாசிக்க தயாராகி விட்டார் பேரறிவாளன். 31 ஆண்டுகால சிறைவாசம் முடிவுக்கு வந்தது. சிறைக் கதவுகள் திறக்க தமிழ் உறவுகள் அவரை இறுக அணைத்து கொண்டன. இந்நிலையில் விடுதலை குறித்து பேசிய பேரறிவாளன், ”தாய்” நாவலை 4 முறை வாழ்க்கையில் படித்துள்ளேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு உணர்வை அளித்துள்ளது. இந்த நாவலுடன் எனது அம்மாவை ஒப்பிடத் தொடங்கினேன். இவர் மாக்சிம் கார்க்கியின் ’தாய்’ போன்றவர் என்றார். ரஷ்ய புரட்சி குறித்து விவரிக்கும் ‘தாய்’ நாவல் பலருக்கு அடிமை சங்கிலியை உடைத்தெறியும் ஆற்றலை அளித்திருக்கிறது. அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராட தூண்டியிருக்கிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்.

    Mageshbabu
    Mageshbabu
  • The Reds: செந்நிறத்தின் எழுச்சிThe Reds: செந்நிறத்தின் எழுச்சி

    The Reds: செந்நிறத்தின் எழுச்சி

    உலகின் மிகவும் பழமையான கால்பந்து தொடர் என்ற பெருமைக்கு உரியது FA Cup (The Football Association Challenge Cup). இது இங்கிலாந்தில் நடைபெறும் ஆண்களுக்கான வருடாந்திர Knock-Out கால்பந்து தொடர். தோல்வி என்றால் வெளியே கிளம்ப வேண்டியது தான். 1871ல் தொடங்கி தற்போது 151வது ஆண்டை எட்டியிருக்கிறது. இத்தகைய சிறப்புக்குரிய ஆண்டில் எனது பேவரைட் Liverpool FC அணி கோப்பை வென்றிருப்பது உற்சாகப் பெருவெளியின் உச்சம் என்றே சொல்லலாம். அதுவும் 16 ஆண்டுகளுக்கு பின்னர் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. என்னுடைய பேவரைட் பயிற்சியாளர் Jurgen Klopp-பிற்கு மிகப்பெரிய சாதனை நிகழ்வாக அமைந்துவிட்டது.

    Mageshbabu
    Mageshbabu
  • Travel: கன்னட தேசத்தில் ஒரு தமிழ் ரசிகன்Travel: கன்னட தேசத்தில் ஒரு தமிழ் ரசிகன்

    Travel: கன்னட தேசத்தில் ஒரு தமிழ் ரசிகன்

    சென்னையில் இருந்து பெங்களூரு சாந்தி நகர் பேருந்து நிலையத்தில் அதிகாலை 5 மணிக்கு வந்திறங்கினேன். கெங்கேரி செல்ல வேண்டும். லால் பாக் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து நடைபயணத்தை தொடங்கினேன். மழை முழுதாய் நிற்கவில்லை. சாரல் மழையில் நனைந்த படியே கூகுள் மேப் உதவியுடன் நடந்தேன். கிட்டதட்ட அரை மணி நேரம் இருக்கும். நீண்ட நாட்களுக்கு பின்னர் நடக்கக்கூடிய வாய்ப்பு. அளவில்லா மகிழ்ச்சி. ஸ்டேஷன் வந்தது. ஆனால் திறக்கப்படவில்லை. ஞாயிறு என்பதால் காலை 7 மணிக்கு தான் முதல் மெட்ரோ என்று அதிர வைத்தார்கள். வேறென்ன செய்வது? Cab புக் செய்தேன். அடுத்த 8வது நிமிடத்தில் நான் நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தது.

    Mageshbabu
    Mageshbabu
  • Sister: தமிழ் அண்ணனும், மலையாள தங்கையும்Sister: தமிழ் அண்ணனும், மலையாள தங்கையும்

    Sister: தமிழ் அண்ணனும், மலையாள தங்கையும்

    நம் தமிழ் உறவுகளுக்குள் குடும்பத்தை தாண்டி தாய்மை, சகோதரத்துவம், நட்பு உள்ளிட்ட பிணைப்புகள் ஏற்படுவது இயல்பான ஒன்று.

    Mageshbabu
    Mageshbabu
    ₹ 10
  • Labour Union: CMPC-யும், ஒற்றை பனை மரமும்...Labour Union: CMPC-யும், ஒற்றை பனை மரமும்...

    Labour Union: CMPC-யும், ஒற்றை பனை மரமும்...

    இந்த உலகம் உழைப்பால் தான் இந்தளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இத்தகைய உழைப்பை செலுத்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு அநீதி இழைக்கப்படுவது காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக குரல் கொடுக்க, கேள்வி எழுப்ப தனிநபரால் சாத்தியமில்லை. ஏனெனில் சக்தி வாய்ந்த அதிகார வர்க்கம் நம்மை அடக்கி ஒடுக்கி காணாமல் செய்துவிடும். எனவே உழைக்கும் கரங்கள் ஒன்றிணைய வேண்டும். உழைப்பாளர்கள் குரல் விண்ணை பிளக்க வேண்டும். அதற்கு தொழிற்சங்கம் என்பது எல்லா காலங்களிலும், அனைத்து தொழில்களிலும் அவசியம். அப்படி பத்திரிகை துறையில் பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் (Centre of Media Persons for Change - CMPC).

    Mageshbabu
    Mageshbabu
  • Sports: அந்த சிவப்பு கலர் ஜெர்சிSports: அந்த சிவப்பு கலர் ஜெர்சி

    Sports: அந்த சிவப்பு கலர் ஜெர்சி

    ரஷ்யாவில் 2018ல் நடந்த உலகக்கோப்பை தொடரின் போது கால்பந்து மீதான ஈர்ப்பு ஏற்பட்டிருந்தாலும், அது தீப்பொறியாக பற்றிக் கொண்டது 2018-19 UCL இறுதிப் போட்டியின் போது தான். அந்த சமயத்தில் Liverpool FC அணி சாம்பியன் பட்டம் வென்று உலகின் கவனத்தை ஈர்த்தது. அந்த அணியின் செந்நிற ஜெர்சியும், "The Reds" என்ற செல்லப் பெயரும், கம்யூனிசம் சார்ந்த நிர்வாகப் பின்னணியும் என்னை பெரிதும் கவர்ந்தன. Everton அணியுடனான மோதல் முதல் ஜான் ஹவுல்டிங்கின் Anfield மைதானத்தின் உருவாக்கம் வரை அதன் வரலாற்றை தேடி தேடி படிக்கச் செய்தது.

    Mageshbabu
    Mageshbabu
  • Environment: சோறா, சூழலா... எது முக்கியம்?Environment: சோறா, சூழலா... எது முக்கியம்?

    Environment: சோறா, சூழலா... எது முக்கியம்?

    ஆரோவில் பயணமும், அதன் தொடர்ச்சியாக சில படிப்பினைகளும் சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தை சற்று அதிகப்படுத்தியுள்ளது. இதன் நீட்சி தான் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் என்னை கலந்து கொள்ள செய்தது. இதன்மூலம் IPCC மதிப்பீட்டு அறிக்கை, காலநிலை மாற்றம், மூழ்கப் போகும் தமிழகக் கடலோர பகுதிகள், 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பூமியின் வெப்பம் அதிகரிக்காமல் தடுப்பது, கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துதல், தற்சார்பு எரிசக்தி, மின்சார பொதுப் போக்குவரத்து என பல்வேறு சொற்களின் ஆழம் புரியத் தொடங்கியது.

    Mageshbabu
    Mageshbabu
  • Celebration: பிறந்த நாள் பரிசுCelebration: பிறந்த நாள் பரிசு

    Celebration: பிறந்த நாள் பரிசு

    நீண்ட நாட்களுக்கு பின்னர் எழுதும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த நண்பன் மோகனுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து நண்பன் மரியா உடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது சேலத்தில் என்னுடன் ஒன்றாக இளங்கலை கணித பட்டப்படிப்பு படித்த நண்பன் மோகனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் பேசி கிட்டதட்ட ஓராண்டிற்கும் மேல் இருக்கும். சமூகம் சார்ந்த உரையாடலை எங்களுக்குள் அதிகம் செய்திருக்கிறோம். ஆனால் அவர் அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை எடுக்காததால் சற்று கோபத்தில் இருந்தேன். இருப்பினும் ஆர்வத்துடன் தொடங்கிய பேச்சு எல்லாவற்றையும் மறக்கடிக்க செய்தது. வேலையை தவிர்த்து சமூகத்திற்கான பயணம் எப்படி போய் கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, முதலாளித்துவ சமூகம் என்னை எப்படி முடக்கி வைத்திருக்கிறது என்று மனக் குமுறல்களை வெளிப்படுத்தினேன். பொதுவாக என்னை போன்றவர்களை எல்லாம் ”வேலைப் பிரியர்கள்” என்று தான் சொல்ல வேண்டும்.

    Mageshbabu
    Mageshbabu
  • Money Heist: ஆல்வரோ மார்டே எனும் வசீகரன்Money Heist: ஆல்வரோ மார்டே எனும் வசீகரன்

    Money Heist: ஆல்வரோ மார்டே எனும் வசீகரன்

    ஆல்வரோ மார்டே என்றால் பலருக்கும் தெரியாது. ’Professor’ அல்லது ’செர்ஜியோ மார்குய்னோ’ அல்லது ’சால்வா’ என்றால் உலகம் முழுவதும் உள்ள Money Heist ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். ஸ்பெயின் நாட்டின் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி சுமாரான வெற்றியை பெற்ற தொடர். அதை Netflix வாங்கி தனது ஓடிடி தளத்தில் வெளியிட உலகம் முழுவதும் சக்கை போடு போட்டது. உலகின் பிரபல நகரங்களின் பெயர்களை தாங்கி ஏராளமான கதாபாத்திரங்கள் இந்த சீரியலில் இருந்தாலும், Professor தான் எல்லோரையும் விட அதிகமாக வசீகரிப்பார். அந்த அளவிற்கு அழுத்தமாக, அதீத புத்திசாலியாக அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். அவரது நடை, உடை, பாவனை உள்ளிட்டவற்றை அப்படியே பிரதி பிம்பம் எடுத்து உலகின் பல்வேறு பிரபலங்களும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாகி வருகின்றனர்.

    Mageshbabu
    Mageshbabu
  • Communism: இளம் கம்யூனிஸ்ட் தோழர்களுக்குCommunism: இளம் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு

    Communism: இளம் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு

    சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு படிப்பினை. சிறிய புத்தகம் தான் என்றாலும் சொல்ல வந்த விஷயங்கள் மிகவும் பெரியவை. இளைய சமூகம் புதியதோர் பொதுவுடைமை சமூகத்தை கட்டமைக்க என்ன செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் தலைவர்களான லெனின் மற்றும் பகத் சிங் ஆகியோர் பேசியதையும், எழுதியதையும் தொகுத்து வழங்கியுள்ளனர். பொதுவாக கம்யூனிசம் பற்றிய புத்தகங்கள் தத்துவார்த்த ரீதியில் கடினமான கருத்துகள் நிறைந்ததாக இருக்கும். இரண்டு, மூன்று முறை திரும்ப திரும்ப படிக்க வேண்டும். அதே குறையை இதிலும் உணர்கிறேன். அதுமட்டுமின்றி நீண்ட வாக்கியங்கள் சோர்வை ஏற்படுத்துகின்றன. இந்த விஷயத்தை பகத் சிங்கும் கூறியிருப்பது எத்தகைய பொருத்தம் பாருங்கள்.

    Mageshbabu
    Mageshbabu
  • Politics: சலூன் கடையும், முதல்வர் ஸ்டாலினும்Politics: சலூன் கடையும், முதல்வர் ஸ்டாலினும்

    Politics: சலூன் கடையும், முதல்வர் ஸ்டாலினும்

    ஆதம்பாக்கம் ஏரியாவில் உள்ள சலூன் கடை ஒன்றில் சிகை அலங்காரம் செய்வதற்காக சென்றிருந்தேன். அங்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரின் புகைப்படங்களும் இருந்தன. முடிவெட்டும் படலம் தொடங்கிய போது கடைக்காரர் அண்ணனுடன் எனது பேச்சும் ஆரம்பித்தது. அந்த அண்ணனின் தந்தை 90களில் அதே இடத்தில் சலூன் கடை வைத்திருந்தாராம். அவரது வழியை மகனும் பின்பற்றி வந்துள்ளார். காவல்துறையில் Home Guard பணியை பகுதி நேரமாக செய்து வருகிறார். இதில் சேருவதற்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமாம். எங்கு விண்ணப்பம் வாங்குவது, எப்படி விண்ணப்பிப்பது என நிறைய விவரங்களை கூறினார். தந்தை காலந்தொட்டே அதிமுகவின் தீவிர தொண்டர்களாக இருந்து வந்துள்ளனர்.

    Mageshbabu
    Mageshbabu
  • Story: ஆமாங்க சாமிStory: ஆமாங்க சாமி

    Story: ஆமாங்க சாமி

    இனிய மாலைப் பொழுது. ஐப்பசி மாத சாரல் மழை சுற்றுவட்டாரத்தை நனைத்துக் கொண்டிருந்தது. ராஜி தன் வீட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். மழை சற்றே தணிந்திருந்தது. சில மளிகைப் பொருட்களை வாங்க வேண்டும் என்று மனைவி சித்ரா கூறியது நினைவிற்கு வந்தது. மழை நின்னுடுச்சு, நான் போய் மளிகை சாமான் வாங்கிட்டு வரட்டுமா? என்று ராஜி கேட்டார். சரிங்க என்று சித்ரா பதிலுரைத்தாள். உடனே நானும் வருகிறேன் என்று மகள் தேவி அடம்பிடித்தாள். லேசா தூறுவது போல் இருக்கு. நீ இங்கேயே இருடா என்றார். ஆனால் தேவி விடவில்லை. சரி தொந்தரவு செய்யாமல் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அழைத்து சென்றார். இந்தாங்க குடை என்றாள் சித்ரா. மெல்லிய புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டு ராஜியும், தேவியும் வெளியே வந்தனர். மழை முழுவதுமாக நின்றிருந்தது. உடனே குடையை பைக்குள் வைத்துவிட்டு, இருவரும் கைகோர்த்து நடந்து சென்றனர். அப்பா எனக்கு தேன் மிட்டாய் வேண்டும் என்று எதிர்பாராத நிபந்தனையை தேவி கூறினாள். சற்றே திகைத்த ராஜி, வீட்டில் கிளம்பும் போது என்ன சொன்னேன் மறந்துவிட்டாயா? என்றார். அப்பா ப்ளீஸ் பா, ரொம்ப நாளாச்சுபா சாப்பிட்டு என்று கெஞ்சத் தொடங்கினாள். தேவியின் கெஞ்சல் ராஜிக்கு கொஞ்சலாக தெரிந்தது. ஆம் என்று சொல்வது போல் தலையசைத்து விட்டு நடையை தொடர்ந்தார். இரண்டு தெருக்கள் தாண்டி சென்றால் தான் மளிகைக் கடை வரும். அருகே புத்தகக் கடை, சலூன் கடை, பால் கடை என வரிசையாக இருக்கும். இருவரின் நடையும் தொடர்ந்து கொண்டிருக்கையில் வழியில் குட்டி நாய் ஒன்று தத்தி தத்தி சென்று கொண்டிருந்தது.

    Mageshbabu
    Mageshbabu